சில ஆன்லைன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைபிடிப்பது இணைய வன்கொடுமைகளைத் தடுக்கவும் இணையவெளியில் பயனர்கள் சுமூகமாகப் பயணிக்கவும் உதவும்.

இணைய வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

  • சமூகஊடககணக்குகளில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களை இயக்கவும்
  • பெற்றோர்கட்டுப்பாட்டுப்பட்டிகள், டெஸ்க்டாப் ஃபயர்வால்கள், உலாவி ஃபில்டர்கள் போன்றவற்றைப் பயன்படுத்திப் பிள்ளைகளை இணைய வன்கொடுமையிலிருந்து அல்லது முறையற்ற உள்ளடக்கத்தை அணுகுவதைத் தவிர்க்கவும் அல்லது தடுக்கவும்.
  • எதிர்மறையானபதிவுகளைக்கண்டால், விவாதப் பக்கத்திலிருந்து வெளியேறி, கொடுமைப்படுத்துபவரைத் தடுக்கவும்.
  • கொடுமைப்படுத்துபவரின்ஆத்திரமூட்டும்கருத்துக்களுக்கு ஒருபோதும் பதிலடி கொடுக்காதீர்கள்.
  • மற்றவர்களுடையஎதிர்வினைஉங்கள் தவறு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள்பிள்ளையின்பள்ளியில் இணையப் பாதுகாப்புக் கல்வித் திட்டம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  • கணினிஆய்வகங்கள், இணையஆய்வகங்களுக்கு விதிகளை உருவாக்கவும்.
  • பள்ளியில்இணையவன்கொடுமைகளைத் தடுக்க, கணினிகள் மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தெளிவான விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளைக் குறிப்பிட வேண்டும்.
  • அனைத்துவிதமானகொடுமைப்படுத்தல்களுமே ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதுடன் அத்தகைய நடத்தை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது என்பதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • மாணவர்களைக்கண்காணித்தல்மற்றும் சக மாணவர்களின் கண்காணிப்பை நிறுவுதல்.

அத்துடன், இணைய வன்கொடுமைச் சிக்கலைத் திறம்படச் சமாளிக்க உதவும் வகையில் குறிப்பிட்ட வகையில் செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

செய்ய வேண்டியவை:

  • உடனடியாகத்தலையிடவேண்டும். உதவிக்கு இன்னொரு பெரியோரை அழைத்துக்கொள்வது நல்லது.
  • சம்பந்தப்பட்டகுழந்தைகளைப்பிரிக்க வேண்டும்.
  • அனைவரும்பாதுகாப்பாகஇருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஏதேனும்உடனடிமருத்துவ அல்லது மனநலத் தேவகைள் இருந்தால், அவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
  • அமைதியாய்இருக்கவேண்டும். பார்வையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு உறுதியளிக்க வேண்டும்.
  • நீங்கள்தலையிடும்போதுமரியாதைக்குரிய நடத்தையை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்.

செய்யக்கூடாதவை:

  • கொடுமைப்படுத்தலைபுறக்கணிக்காதீர்கள். பெரியவர்களின்உதவியின்றிப் பிள்ளைகளால் இதைச் சமாளிக்க முடியும் என்று நினைக்க வேண்டாம்.
  • உண்மைகள்என்னவென்றுஉடனடியாகக் கண்டறிய முயற்சிக்காதீர்கள்.
  • மற்றபிள்ளைகளைஅவர்கள் பார்த்ததைப் பகிரங்கமாகச் சொல்லும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்.
  • சம்பந்தப்பட்டபிள்ளைகளைமற்ற பிள்ளைகள் முன் கேள்வி கேட்காதீர்கள்.
  • சம்பந்தப்பட்டபிள்ளைகளைஒன்றாக வைத்துப் பேசவேண்டாம், தனியாக மட்டுமே பேசவும் 
  • சம்பந்தப்பட்டபிள்ளைகளைஅந்த இடத்திலேயே மன்னிப்பு கேட்க வைக்கவோ அல்லது உறவுகளை இணைத்து வைக்கவோ வேண்டாம்.