துவக்கவுரை
இந்த ஆன்லைன் சகாப்தத்தில், அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன, நெருங்கிய உறவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல, இணைய உலகில் கண்ணில்படும் அனைத்தும் உண்மையாக இருக்க முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்வது உண்மையில் அவசியம்.
இணையத்தில் நீங்கள் சந்திக்கும் வருங்கால வாழ்க்கைத் துணை மோசடி செய்பவராகவும், நம்பகமான இணைய நண்பர் குற்றவாளிகளாகவும் மாறிய நிகழ்வுகள் ஏராளம். எனவே, டிஜிட்டல் பயனர்கள், மனசுடைந்துப் போவதிலிருந்தும் பணப்பையில் ஓட்டை ஏற்படுவதிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, இணையத்தில் தொடர்பு கொள்ளும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பதுடன், விழிப்புடனும் விஷயமறிந்தும் இருப்பது அவசியம்.
ஒரு மோசடிக்காரர் போலி சுயவிவரத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்படுவோரை சிக்கவைத்து, அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏதோ அல்லது பல சாக்குப்போக்கு கூறி பங்கிடும்படி அவர்களை நம்ப வைக்கும்போது இணைய காதல் மோசடி நடைபெறுகிறது.