சமூக ஊடகத் தளங்களின் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்குமான உதவிக்குறிப்புகள்
- உங்கள் மொபைலில் அம்சங்களை நிர்வகித்திடுங்கள்
நேரத்தை வீணடிக்கும் செயலிகளை நீக்குவது போன்ற திறன்மிக்க நேர மேலாண்மைக்கான சில உதவிக்குறிப்புகளை நடைமுறைபடுத்தப் பார்க்கலாம் மற்றும் அறிவிப்பு விழிப்பூட்டல்கள், தானியங்கி புஷ் அறிவிப்புகள் போன்ற கவனத்தைச் சிதறடிக்கும் அம்சங்களை முடக்கலாம், இரவில் விழித்திருப்பதைத் தடுக்க திரையை சாம்பல் நிறத்தில் அமைக்கலாம், ‘என்ன தேவை இருக்கிறது’; ‘ஏன் இப்போது’ என்பது போன்ற கேள்விகளுடன் திரைப் பூட்டை உருவாக்கலாம்.
- டிஜிட்டல் இல்லாத மண்டலங்களை உருவாக்கிடுங்கள்
டிஜிட்டல் சாதனம்/மொபைல் இல்லாத மண்டலங்களை அமைத்து, உறங்கும் நேரம், உணவு நேரம் மற்றும் குடும்ப நேரத்தின்போது அவற்றை கண்ணுக்குத் தெரியாமல் வைத்திருப்பதை நடைமுறைப்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் படுக்கையறைக்கு வெளியே உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய நீங்கள் திட்டமிடலாம்.
- ஆரோக்கியமான பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்/நேரத்தைக் கடத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்
நீங்கள் உண்மையிலேயே விரும்பும் ஆரோக்கியமான பொழுதுபோக்கை வளர்த்துக்கொண்டு, உங்கள் ஆன்மாவுக்கு உணவளித்து 'உங்களுக்கான நேரத்தை' வழங்குங்கள், அதில் நடைப்பயணங்களுக்கு நிறைய நேரம் ஒதுக்குதல், குடும்பத்துடன் பலகை ஆட்டங்கள் விளையாடுதல், குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லுதல், சமையல், தோட்டக்கலை, ஓவியம் வரைதல், நண்பர்களைச் சந்தித்தல், நல்ல புத்தகங்களைப் படித்தல், தன்னார்வத் தொண்டு செய்தல் போன்ற விஷயங்களைச் செய்யலாம்.
டிஜிட்டல் டிடாக்ஸ் என்பது உங்கள் நேரம், ஆற்றல் மற்றும் உங்கள் கவனத்தை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் அல்லது செலவிடுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்வது. நீங்கள் எதை அதிகமாகவும் குறைவாகவும் விரும்புகிறீர்கள் என்பதை உணரச் செய்வதற்கு இது உதவுகிறது, எனவே நீங்கள் உதவாத பழக்கங்களை உடைத்து, மேலும் அர்த்தமுள்ள புதிய பழக்கங்களை உருவாக்கலாம்.