மோசடி செய்பவர் இணையத் தொலைபேசிச் சேவையைப் (VoIP) பயன்படுத்தி, இலக்குக் கொண்ட நபரை முக்கியமான தனிப்பட்ட/நிதித் தகவலை வெளிப்படுத்தச் செய்தால், அது விஷிங் அல்லது வாய்ஸ் ஃபிஷிங் (குரல் வழி ஏமாற்றுதல்) எனப்படும். இது ஒரு வகையான ஃபிஷிங் தாக்குதல் ஆகும். இதுபோன்ற மோசடி குரல் அழைப்புகளைச் செய்யும் மோசடி செய்பவர்கள் விஷர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் போலி அழைப்பாளர் ஐடி சுயவிவரங்களை (ஏமாற்று அழைப்பாளர் ஐடி) உருவாக்குகிறார்கள், இது தொலைபேசி எண்களை நம்பகமானது போல் காட்டுகிறது. விஷிங்கின் குறிக்கோள் ரொம்பவே எளிமையானது, தனிநபர்களிடத்தில் பயத்தை ஏற்படுத்தி பணம் அல்லது அடையாளத்தைத் திருடுவது, அல்லது இரண்டையும் திருடுவது ஆகும்.

மேலும் மோசடி செய்பவர்கள் சமூக பொறியியல் தந்திரோபாயங்கள், உளவியல் மற்றும் சமூக முறைகளைப் பயன்படுத்தி பயனர்களிடம் கையாடல் செய்கின்றனர் அல்லது பயனர்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் இலக்கு கொண்ட நபர் அவருடைய தகவல்களை வழங்க வைக்க போலி அழைப்புகள் அல்லது விஷிங் தாக்குதல்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யசொல்லி பயனரின் உணர்ச்சிகளைக் குறிவைக்கின்றனர்.

விஷங் தாக்குதல்கள் நடைபெறும் வழிகள்

இந்த நுட்பத்தில், மோசடி செய்பவர், நிதி மோசடிகளைச் செய்ய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் பயனரை ஏமாற்றலாம்/அவரிடம் கையாடல் செய்யலாம்.

போலி அழைப்பாளர் ஐடியை உருவாக்குவதன் மூலம், அது நம்பகமான ஆதரத்திலிருந்து வந்ததாகத் தோன்றச் செய்வது

போலியான அழைப்புகள் மற்றும் பின்வரும் பல்வேறு சாக்குப்போக்குகள் சொல்லி பயனர்களை நம்ப வைப்பது

o கேஒய்சியைப் புதுப்பிக்க வேண்டும்

o ஆதாரை இணைக்க வேண்டும்

o இலவச பரிசு/லாட்டரி/பரிசுகள் கிடைத்துள்ளது

o வங்கி/எரிவாயு நிறுவனம் போன்றவற்றின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுகிறேன் என்று சொல்லி பயனர்கள் பல விதமாக ஏமாற்றப்படுவார்கள்.

பயனரிடம் பணத்தைப் பெற, பார்/கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும்படி கேட்டல்

கூகுளில் இவர்களே புதுப்பித்த போலி வாடிக்கையாளர் சேவை எண்களை அழைக்குமாறு பயனர்களிடம் சொல்லுதல் எனப் பல வழிகளில் விஷிங் நடைபெறலாம்.