தூண்டிலிடுதல் என்பது ஒரு வகையான இணைய தாக்குதல் ஆகும், இதில் மோசடி செய்பவர் பாதிப்படையக் கூடியவர்களை கவர்ச்சிகரமான தூண்டில் மூலம் கவர்ந்து மாவேரைப் பதிவிறக்கச் செய்ய வைக்கிறார்/ தந்திரம் செய்கிறார். தூண்டில் என்பது USB, பென்டிரைவ், சிடி போன்ற மீடியாவாக இருக்கலாம், அவை மால்வேர் மூலம் கைப்பற்றப்படலாம்/ மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மால்வேர் ஆனது இலவச திரைப்பட பதிவிறக்கங்கள் என்ற வடிவில் மறைந்திருந்து மீடியாவுக்குள் செல்லலாம்.  அது மட்டுமல்லாது, மோசடி செய்பவர் இந்த மீடியா சாதனங்களை சில பிரபலமான நிறுவனத்தின் லோகோக்கள் போன்றவற்றைக் கொண்டு லேபிளிடலாம்.

உதாரணமாக:

  • பாதிக்கப்பட்ட பென் டிரைவ்களை இலவசமாக விநியோகிப்பது, இலவச ஆன்ட்டிவைரஸ், இலவச திரைப்பட பதிவிறக்கங்கள் போன்றவை,
  • USB, பென் டிரைவ் போன்ற பாதிக்கப்பட்ட மீடியாக்களை பொது இடங்களில் விட்டுச் செல்லுதல்
  • திரைப்படங்கள், கேம்கள், ஆன்ட்டிவைரஸ் போன்றவற்றின் இலவசப் பதிவிறக்கங்களை விளம்பரப்படுத்துதல்,